8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 26 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும் இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தசூழலில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று தொடங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி (25.10.2021) திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல நாளைய தினத்தில் (26.10.2021) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 27ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 27.10.2021, 28.10. 2021 ஆகிய நாட்களில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.