முக்கியச் செய்திகள் சினிமா

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

பிரபல நடிகர் நெடுமுடி வேணு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார்.  

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவர், தமிழில், ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வந்தார். 1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.

73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று சேர்க்கப்பட்டார். அங்கு ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் காலமானார். இதையடுத்து சமூகவலைதளங்களில் நடிகர், நடிகைகள், ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Halley karthi

பாகுபலி வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு

Gayathri Venkatesan

திருநங்கைகளுக்கு வேலை உருவாக்கித் தருவேன்: அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்

Halley karthi