நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்.

கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’ படத்தில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் கோட்டா சீனிவாச ராவ் (83) சில மாதங்களாக உடல்நலகுறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.