கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கட்லூருக்கு தாயப்பா – சின்னி என்ற தம்பதியினர் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இருக்க கூடிய சுற்றுலா பகுதிகளை இருவரும் சேர்ந்து ரசித்துள்ளனர்.
மேலும் அங்கு இருக்க கூடிய பகுதிகளை ரசித்த படி இருவரும் அங்கு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது தாயப்பாவை அவரது மனைவி சின்னி ஆற்றில் தள்ளிவிட்டுள்ளார்.
தாயப்பா ஆற்றில் தத்தளித்ததை கண்ட உள்ளூர் மக்கள் விரைந்து வந்து அவரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தாயப்பா அவரது மனைவி தன்னை கொல்ல திட்டமிட்டு தான் வேண்டுமென்று ஆற்றில் தள்ளிவிட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து அவரது மனைவி சின்னி மேல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








