#bloodybeggar | “என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்” – நடிகர் கவின் நெகிழ்ச்சி பதிவு!

ப்ளடி பெக்கர் திரைப்படம் எப்பொதும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என நடிகர் கவின் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா திரைப்படங்களின் கவினுக்கு வெற்றி…

Actor Gavin Leschi shared photos from 'Bloody Becker'

ப்ளடி பெக்கர் திரைப்படம் எப்பொதும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என நடிகர் கவின் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா திரைப்படங்களின் கவினுக்கு வெற்றி திரைப்படங்களாக மாறி இருக்கிறது. அவரது ‘டாடா’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்தார். ஸ்டார் திரைப்படம் கடந்த மே திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : “தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்” – ஆளுநரின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

‘ஸ்டார்’ திரைப்படத்தை தொடர்ந்து கவின் நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் ‘ப்ளடி பெக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

இந்நிலையில் ‘பிளடி பெக்கர்’ படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகர் கவின், அதனுடன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றையும் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம்… அவனை ஏய், யோய், பிச்சைக்கார பயலே என்றெல்லாம் அழைப்பார்களாம்…’ என்றும் ‘இந்த திரைப்படம் எப்போதும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.