ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ஆலோசனை நடத்தினர். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதை அடுத்து, நடிகர் சங்கத்…

சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ஆலோசனை நடத்தினர்.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதை அடுத்து, நடிகர் சங்கத் தலைவராக நடிகர் நாசர், பொருளாளராக நடிகர் கார்த்தி , துணை தலைவராக நடிகர் பூச்சி முருகன் ஆகியோர் தேர்வாகினர்.

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் உட்பட பல்வேறு முக்கிய
நடிகர்களை புதிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்
இல்லத்துக்குச் சென்ற நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன்,
பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினியை சந்தித்ததாகவும்,
சந்திப்பின் போது நடிகர் சங்கத்துக்கு பல முக்கிய ஆலோசனைகள் மற்றும்
அறிவுரைகளை அவர் வழங்கியதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.