“நடிகர் அஜித்குமார் ‘Welcome to Big League’ என வாழ்த்தினார்” – #Sivakarthikeyan நெகிழ்ச்சி!

நீங்கள் பெரிய இடத்துக்கு வந்துருக்கீங்கன்னு நடிகர் அஜித்குமார் தன்னிடம் கூறியதாக நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அமரன்’. இந்தப் படத்தை ராஜ்குமார்…

“Actor Ajithkumar greets 'Welcome to Big League'” - #Sivakarthikeyan Excitement!

நீங்கள் பெரிய இடத்துக்கு வந்துருக்கீங்கன்னு நடிகர் அஜித்குமார் தன்னிடம் கூறியதாக நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அமரன்’. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகிறது.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (அக்.18) சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமரன் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் நடிகர் அஜித்குமாரை சந்தித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் கூறியதாவது,

”நண்பர் ஒருவரின் கெட் டூ கெதர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு கதவைத் திறந்ததும் அஜித் சார் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ‘வெல்கம் டூ பிக் லீக்’ என வாழ்த்தினார். நான் புரியாமல் அவரைப் பார்த்தபோது, ’உங்களின் வளர்ச்சியைப் பார்த்து சிலர் இன்செக்யூரா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இந்த விஷயம் நீங்கள் பெரிய இடத்துக்கு வந்துருக்கீங்க என்பதையே உணர்த்துது’ன்னு சொன்னார். நம் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அதற்குள் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.