16 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய் நிர்வாக இணை ஆணையராக இருந்த ஜான் லூயிஸ், தமிழ்நாடு அரசு கேபிள்…

தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய் நிர்வாக இணை ஆணையராக இருந்த ஜான் லூயிஸ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைச் செயலாளராக அபூர்வாவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் செயலாளராக அதுல்ய மிஸ்ராவையும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையராக ஹிதேஷ் குமார் மக்வானாவும், உயர்கல்வித்துறையின் கூடுதல் செயலாளராக பழனிசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக நந்தகோபாலையும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக சரவணவேல் ராஜையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சிறப்பு செயலாளராக லில்லியையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரூராட்சிகள் இயக்குநராக கிரண் குர்ராலாவையும், சமூக சீர்திருத்தத்துறைச் செயலாளராக ஆப்ரஹாமையும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மேலும், சமூக நலத்துறை செயலாளராக ஷுன்சோன்கம் ஜகத்தும், செய்தித்துறை செயலாளராக செல்வராஜையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.