உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக இருக்க கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு கிளப், லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்துள்ளது.
கால்பந்து விளையாட்டில் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரொனால்டோ தன்னுடைய இளமை காலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் என்னும் கால்பந்து கிளப்புக்காக விளையாடினார். பின்னர் ரியல் மேட்ரிட், யுவன்டஸ் என வெவ்வேறு கிளப்களில் பல சாதனைகளை படைத்துள்ளார். ஐந்து முறை பலோன்டோர் விருது, 5 சாம்பியன்ஸ் லீக் டைட்டில், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தம் ஆகி விளையாடி வந்த ரொனால்டோ, சமீப காலமாக சரியான ஃபார்மில் இல்லாததால் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பேட்டி அளித்த அவர், மான்செஸ்டர் யுனைடெட் மேனேஜரையும், அணி நிர்வாகத்தையும் கடுமையாக சாடியிருந்தார். உலகம் முழுவதும் வைரலாக பரவிய அந்த பேட்டியின் காரணமாக அவரை அணியிலிருந்து வெளியேற்றியது மான்செஸ்டர் யுனைடெட்.
இப்போது எந்த கிளப்பிலும் இல்லாத ரொனால்டோ, தனது தேசிய அணிக்காக உலக கோப்பையில் விளையாடி வருகிறார். அவரை செல்சி, பிஎஸ்ஜி, பயர்ன் முனிக் போன்ற பிரபல கிளப் அணிகள் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் புதிதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்பதுபோல சவுதியைச் சேர்ந்த ஒரு கிளப், ரொனால்டோக்கு ஒரு ஆஃபர் கொடுத்துள்ளது.
அதாவது இரண்டரை ஆண்டுகளுக்கு 500 மில்லியன் யூரோ. இந்திய மதிப்பில் ரூ.4,200 கோடி சம்பளம் கொடுக்க அந்த கிளப் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரொனால்டோ ஒரு ஆண்டுக்கு ரூ.1,700 கோடி சம்பளமாக பெறுவார். இந்த கான்ட்ராக்ட்டுக்கு ரொனால்டோ சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், உலகக் கோப்பை முடிந்த உடனே அந்த கிளப்பில் ரொனால்டோ இணையப் போவதாகவும் பரவலாக பேசப்படுகிறது.
சவுதியைச் சேர்ந்த அல்-நசர் என்ற கிளப் தான் ரொனால்டோவுக்கு இந்த ஆஃபரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும்நிலையில், ஃபார்மில் இல்லாத ரொனால்டோவுக்கு, எதற்காக ஒரு ஆண்டுக்கு 1,700 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க அந்த கிளப் முயற்சிக்கிறது என பலர் குளப்பத்தில் உலகக் கோப்பை கால்பந்து தொடரை ரசித்து வருகின்றனர்.