ரேசன் கடைகளை நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியாயவிலைக்கடைகளை நம்பி 2.2 கோடி அட்டைகளுக்கு தரமான பொருட்களை உறுதி செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டை பொறுத்த வரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் இருக்கின்றது. சில நேரங்களில் தரமற்ற பொருட்கள் வந்தால் , பழைய அரிசி ஏதாவது இருந்தால் மக்களுக்கு வழங்காமல் திருப்பி அனுப்ப அறிவுறுத்தபட்டுள்ளது. மாதிரி கடைகள் உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
பொருட்கள் வாங்காத நபர்களை கண்டறித்து அவர்களைகளை எடுத்து முறைபடுத்தவும், ரேசன் கார்டு கிடைக்காதவர்களுக்கு ரேசன் கார்டு கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். நியாய விலை கடைகளை மாடர்டன் கடைகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இலவசமாக கொடுக்கும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வேறு மாநிலத்திற்கு கொண்டு சென்று பாலிஷ் செய்து விற்பனை செய்ய கூடாது என்பதற்காக கண்காணப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது. மே மாதம் மூலம் தற்போது வரை 2853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40458 குவிண்டல் ரேசன் பொருட்கள் பறிமுதல் செய்து இருப்பதுடன் 901 வாகனங்களும் பறிமுதல் செய்யபட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கேரளா, ஆந்திரா மாநில எல்லைகளில் 41 சோதனைக் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தபட்டுள்ளது எனவும் தெரிவித்தார். ரேசன் பொருட்கள் மட்டுமல்லாமல், அத்தயாவசிய பொருட்களின் விலை குறித்தும், தரமான பொருட்களாக இருக்கின்றதா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.








