வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு

சென்னை புறநகர் பகுதியில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,…

சென்னை புறநகர் பகுதியில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், சூரப்பட்டு, வானகரம் ஆகிய சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு 45 ரூபாயாக இருந்த கட்டணம் 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணம் 65 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘தாட்கோ அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை ’ – தாட்கோ தலைவர் மதிவாணன்

அதேபோல, சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கான கட்டணம் 60 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணம் 90 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.