“கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் நாடார் மேற்கொண்ட கொள்கை நிலைப்பாட்டைத் தாங்கிக் கொள்ள முடியாத சமூக விரோத சக்திகள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதும், அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

கொள்கை நிலைப்பாடுகளை கொலை மிரட்டல்களால் பணிய வைக்க முடியாது. முத்து இரமேஷ் நாடாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.