ஈரோடு கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரனா தொற்று மிக குறைவாக இருப்பதாகவும் அதற்காக கவனக்குறைவாக இல்லை எனவும் கூடுதலாக கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் அடுத்த அலை வருவதற்கு முன்பாகவே கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் புறநானூற்று ஏற்றத்தில் இருப்பதால் அவை மேலும் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஈரோடு கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் எனவும் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.
– இரா.நம்பிராஜன்







