இந்தியா

வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பணியாற்றும் பீகாா் இளைஞா்களை உள்ளூா் மக்கள் தாக்குவது போல 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோக்கள் பீகாா், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாகப் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு காவல் துறை, அந்த வீடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ குறித்து  அந்த மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வெளியான வீடியோக்கள் போலியானது.

இதையும் படிக்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை- டிஜிபி எச்சரிக்கை

பீகாரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் போலி என தமிழ்நாடு டிஜிபி விளக்கமளித்துள்ளார். வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை. அவர்கள் ஏன் தவறாக வழிநடத்துகிறார்கள்? இதுபோன்ற சம்பவம் நடந்தால் எங்கள் அரசும், தமிழ்நாடு  அரசும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதனிடையே பீகார் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ.43 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை!

Jayasheeba

வந்தே மாதரம் பாடல் பாடிய ராணுவ வீரர்கள் – கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி

EZHILARASAN D

ஆஸ்கர் விருதுகள் 2023: இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம்

Web Editor