நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 447 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,686 பேர் கொரோனாவில் இருந்து…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,686 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,11,39,457 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,02,188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா பரவல் வீதம் 2.35 ஆகவும், தினசரி பரவல் வீதம் 2.59 ஆகவும் உள்ளது. மொத்த பாதிப்பானது 3,19,69,954 ஆக அதிகரித்துள்ளது.” என தெரிவித்துள்ளது.

https://twitter.com/MoHFW_INDIA/status/1424587917746335744

உயிரிழப்பை பொறுத்த அளவில், 447 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,28,309 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 50,86,64,759 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், “கடந்த 24 மணிநேரத்தில், 13,71,871 மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 48,17,67,232 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.