ஆபாச மெசெஜ் அனுப்பி தொல்லை கொடுப்பதாக ஊழியர் மீது உணவு டெலிவரி செய்யும் பெண் புகார் அளித்துள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு டெலிவரி செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார். அதே தனியார் ஓட்டலில் வேளச்சேரி கிளையில் பணிபுரிந்து வந்த மதன் என்பவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கு அறிமுகம் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மதன் அலுவலக குரூப்பில் இருந்து கடந்த 5 ஆம் தேதி இளம்பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்து ஆபாசமாக மெசெஜ் அனுப்பியும், ஒரு நபரைதான் பழிவாங்க வேண்டும் அதற்கு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து உதவ வேண்டும் என தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதே போல் நள்ளிரவில் வீடியோ கால் செய்து வந்துள்ளார்.
இதனால் அந்த பெண் நேற்று வேப்பேரி காவல் நிலையத்தில் மதன் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.