தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரித்த கடன் சுமை

தமிழ்நாட்டு கடன் சுமை படிப்படியாக அதிகரித்தது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி கூட உள்ள நிலையில், சென்னை தலைமைச்…

தமிழ்நாட்டு கடன் சுமை படிப்படியாக அதிகரித்தது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி கூட உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார்.  இந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 1999 – 2000ம் ஆண்டுகளில் கடன் சுமையானது ரூ.18 ஆயிரத்து 989 கோடியாக இருந்தது. அதன்பின் 2000 – 2001ம் ஆண்டுகளில் ரூ.28 ஆயிரத்து 685 கோடியாகவும், 2001 – 2002ம் ஆண்டுகளில் 34 ஆயிரத்து 540 கோடி ரூபாயாகவும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து 2005 – 2006ம் ஆண்டுகளில் ரூ.50 ஆயிரத்து 625 கோடியாக அதிகரித்த கடன் சுமை, 2011 – 2012ம் ஆண்டுகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 999 கோடியை எட்டியது.

இதே போல், 2015 – 2016ம் ஆண்டுகளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாகவும், 2017 – 2018ம் ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாகவும் அதிகரித்தது. 2020 – 2021ம் ஆண்டுகளில் ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி கடன் சுமை அதிகரித்த நிலையில், தற்போது ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.