ஆரணி அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பால் வியாபாரியை படுகொலை செய்து தலைமறைவான குற்றவாளியை, காவல்துறையினர் படகில் சென்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விளை கிராமத்தில் நேற்று முன்தினம் மது போதையில்…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பால் வியாபாரியை
படுகொலை செய்து தலைமறைவான குற்றவாளியை, காவல்துறையினர்
படகில் சென்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விளை கிராமத்தில் நேற்று முன்தினம்
மது போதையில் சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டையை பால் வியாபாரி
சேட்டு என்பவர் விலக்கி விட்டு , இரவு அங்குள்ள நாகாத்தம்மன் கோயிலில் உறங்கி
உள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர், பால்
வியாபாரி தலைமீது பெரிய கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார்.

மேலும், தகவல் அறிந்து ஆரணி போலீசார் வருவதை அறிந்த கொலை குற்றவாளி
சிவசங்கரன், அருகில் உள்ள அடர்ந்த நீர் நிரம்பிய ஏரி பகுதியில் ஓடி தலைமறைவாகி
உள்ளார். பின்னர், குற்றவாளியை பிடிப்பதற்காக ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன்
மற்றும் போலீசார்கள் படகு மூலம் ஏரியில் நீந்தி சென்றுள்ளனர்.

அப்போது, அடர்ந்த புதர் பகுதியில் மறைந்திருந்த குற்றவாளி சிவசங்கரனை
பிடித்து படகில் கரைக்கு கொண்டு வந்து கைது செய்தனர். கொலை
செய்துவிட்டு தலைமறைவான குற்றவாளியை, ஆறு மணி நேரத்தில் ஆரணி
போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும்,
கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.