குஜராத்தில் தடுப்புச்சுவரில் மோதிய பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் காயமடைந்தனர்.
குஜராத் மாநிலம், துவாரகா-கம்பாலியா தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது பேருந்து நேற்று (செப்டம்பர் – 28ம் தேதி ) மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அந்த பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்கப்பட்டு கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படியுங்கள் : இந்தியா – பங்களாதேஷ் #Test போட்டியின் 3வது நாள் ஆட்டமும் தாமதம் | மைதானத்தை ஆய்வு செய்யும் அம்பயர்கள்!
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலையை கடந்த மாட்டை காப்பாற்ற ஓட்டுநர் முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதியதோடு இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீதும் மோதியதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







