6-வது மாடியில் இருந்து ஏசி கழன்று விழுந்து மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏசி கழன்று விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்ட பிரிவில்,…

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏசி கழன்று விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்ட பிரிவில், மருத்துவமனை உதவியாளராக (ஒப்பந்த ஊழியராக) பணிபுரிந்து வந்தவர் திருநாவுக்கரசு. 60 வயதான இவர், இன்று மதியம் பணி முடிந்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக கிளம்பி உள்ளார்.

இதையும் படியுங்கள் : பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லை! – சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

அப்போது அவர் மீது 6-வது மாடியில் இருந்து ஏசி ஒன்று கழன்று விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசு, ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.

திருநாவுக்கரசு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏசி விழுந்து மருத்துவமனை ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.