ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புதிய குற்றச்சாட்டு: 3 இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார்..!

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கால், மேலும் 3 இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங்,  விசாரணையின் போது…

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கால், மேலும் 3 இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங்,  விசாரணையின் போது கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வரும் நிலையில், அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பாப்பாக்குடி காவல் நிலையத்திலும் மூன்று இளைஞர்கள் பாதிக்கப்பட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

20 வயதான இசக்கி பாண்டி, மகாராஜன் ஆகிய இரண்டு இளைஞர்களும், 19 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. தற்போது பற்களை சேதப்படுத்திய விவகாரத்தில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிதாக பாப்பாக்குடி காவல் நிலையத்திலும் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்று இருப்பதாக வந்துள்ள புதிய குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு பதிலாக புதிதாக அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு மகேஷ் குமார் என்பவரும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தின் ஆய்வாளராக செந்தில்குமார் என்பவரும் விக்ரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக சுஜித் ஆனந்த் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.