முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
“நமது அன்புக்குரிய முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறோம். அவர் ஒரு எழுச்சியூட்டும் தொலைநோக்கு பார்வை கொண்டவர், சிறந்த விஞ்ஞானி, வழிகாட்டி மற்றும் ஒரு சிறந்த தேசபக்தர் என்று நினைவுகூரப்படுகிறார்.
நமது தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. அவரது எண்ணங்கள் இந்திய இளைஞர்களை வளர்ந்த மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்க பங்களிக்க ஊக்குவிக்கின்றன”. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.







