சென்னை ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வீட்டிற்கு இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை செய்த பிறகு அது புரளி என தெரியவந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







