முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்சினிமா

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’  திரைப்படம் அடுத்த ஆண்டு  ஏப்ரல் 10 ஆம் தேதி உலகளவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) படமாக எடுத்துள்ளார்கள். இதில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கரோனா காரணமாக படப்பிடிப்பு எப்படியெல்லாம் தள்ளிப்போனது குறித்து நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் வருகிற 2024, ஏப்ரல் 10 ஆம் தேதி உலகளவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Aadujeevitham | The Goat Life | Blessy | Prithviraj Sukumaran | Release Date Reveal

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!

Web Editor

”8 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது”- பிரதமர் மோடி பெருமிதம்

Web Editor

ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பு…தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்..!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading