இலவசமாக ஆதார் அப்டேட் பண்ணலயா? உங்களுக்கான செய்தி தான் இது!

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை யுஐடிஏஐ(UIDAI) வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது. …

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை யுஐடிஏஐ(UIDAI) வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது.  இதன்மூலம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.  முன்னதாக,  இலவச புதுப்பிப்பு காலக்கெடு (மார்.14) இன்று வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்த காலக்கெடு ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14 ஆம் தேதி வரை இணையதளத்தில் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக,  ஆதார் அட்டையில் உள்ள ஒவ்வொரு விவரத்தையும் புதுப்பிப்பதற்கு ரூ. 50 செலவாகும்.  அரசு தெரிவித்துள்ள கட்டணமில்லா இணைய சேவைகளுக்கு மட்டுமே இலவச வசதி பொருந்தும்.  மற்ற சேவைகளை ஆதார் மையங்களில் கட்டணம் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.