இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர் காலமானார்!

70 ஆண்டுகளுக்கு மேலாக இரும்பு நுரையீரல் உதவியுடன் சுவாசித்து உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர்,  தனது 78 வது வயதில் காலமானார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் பால் அலெக்சாண்டர்.  இவர்…

70 ஆண்டுகளுக்கு மேலாக இரும்பு நுரையீரல் உதவியுடன் சுவாசித்து உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர்,  தனது 78 வது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் பால் அலெக்சாண்டர்.  இவர் தனது 6 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார்.   இதனால் அவரின் கழுத்துக்கு கீழ்பகுதி முழுமையாக செயலிழந்தது.  இதனால் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டு வந்ததால் உறவினர்கள் அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்றனர்.  அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

ஆனால் அங்கிருந்த மருத்துவர் ஒருவர் அவருக்கு  ‘ட்ரக்கியோஸ்டோமி’  (Tracheostomy) என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.  அப்போது பால் அலெக்சாண்டருக்கு சிலிண்டர் வடிவிலான ‘இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டது.  செயல்படாமல் இருக்கும் நுரையீரலுக்கு செயற்கையாக வெளியில் இருந்து அழுத்தம் கொடுத்து,  அதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்து காற்றை சுவாசிக்கச் செய்யும் ஒரு வடிவமைப்பு தான் இரும்பு நுரையீரல் என்பது.  இது 1920 ஆம் ஆண்டுகளிலேயே போலியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது.  இரும்பு நுரையீரல் பொறுத்தப்பட்டதால் தொடர்ந்து 18 மாதங்கள் பால் அலெக்சாண்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பெட்டி போல வடிவமைக்கப்பட்ட இரும்பு நுரையீரலுடன் வாழ்வது என்பது மிகவும் கொடுமையானது.  அந்த வாழ்க்கையைத் தான் அலெக்சாண்டர் வாழ்ந்து வந்தார்.  கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கைப் பயணத்தை மிட்ச் சம்மர்ஸ் என்பவர் ஒரு சிறிய ஆவணப்படமாக தயாரித்தார்.

அதில் பால் அலெக்சாண்டர் கூறியதாவது,  “என்னுடைய நிலையை கண்டு அனைவரும் என்னை வெறுத்தனர்.  என்னுடன் பேசவே தயங்கினர்.  நான் பள்ளி படிப்பை முடித்த பின், எனது நிலைமை கண்டு கல்லூரியில் என்னை சேர்க்கவில்லை.  2 வருடங்கள் கழித்து பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு கல்லூரில் சேர்ந்து வழக்கறிஞராக பட்டம் பெற்றேன்.  பின்னர் சில வரலாற்று புத்தகங்களை எழுதினேன்.  மேலும் உங்களுடைய கடந்த கால இயலாமையை நினைத்து யாரும் வருத்தப்படாதீர்கள்.  ஏனேனில், அதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன்” என்று வேதனையுடன் கூறியிருந்தார்.

அலெக்சாண்டரை இரும்பு நுரையீரலுக்குள் இருந்து விடுவித்து சாதாரணமாக சுவாசிக்க வைக்கும் முயற்சியிலும் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.  ஆனால் நீண்ட நேரத்திற்கு அவரால் சுவாசிக்க முடியவில்லை.  அவருக்கு உடலியல் பயிற்சி கொடுத்து வந்த சல்லிவன் என்ற மருத்துவர்,  அலெக்சாண்டருக்கு நம்பிக்கை கொடுத்தார்.  வெண்டிலேட்டர் உதவியில்லாமல் மூன்று நிமிடங்களுக்கு தானாக சுவாசித்தால் அழகிய நாய்குட்டி ஒன்றை பரிசலிப்பதாக சல்லிவன் கூற,  அந்த சவாலில் வென்று நாய்க்குட்டியை பரிசாகப் பெற்றார்.

இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டவர்களின் நுரையீரல் ஒன்றிரண்டு வாரங்களிலேயே சாதாரணமாகி விடும்.  உடனே இரும்பு நுரையீரலை அகற்றி விடுவார்கள்.  ஆனால் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இரும்பு நுரையீரலுடன் சுவாசித்து உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர்,  தனது 78வது வயதில் காலமானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.