நியூஸ் 7 தமிழின் புதிய முன்னெடுப்பு; “வேண்டாம் போதை” விழிப்புணர்வு நிகழ்ச்சி

நியூஸ் 7 தமிழின் புதிய முன்னெடுப்பான “வேண்டாம் போதை” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காலை 10 மணிக்குத் துவங்குகிறது. பொறுப்பும் பொதுநலனும் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ்…

நியூஸ் 7 தமிழின் புதிய முன்னெடுப்பான “வேண்டாம் போதை” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காலை 10 மணிக்குத் துவங்குகிறது.

பொறுப்பும் பொதுநலனும் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புதிய முன்னெடுப்பாக “வேண்டாம் போதை” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காலை 10 மணிக்குத் தொடங்கப்படவுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைக்கிறார்.

அண்மைச் செய்தி: ‘’குலசேகரன்பட்டினத்தில் 2000 ஏக்கர் நிலம் தேர்வு’ – இஸ்ரோ தலைவர்’

சென்னை கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சென்னை பெருநகர காவல்துறை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி, Lions Club District Governor முகம்மது நவீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

https://twitter.com/news7tamil/status/1542711574992805888

இன்று தொடங்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூலை 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொதுநலன் கருதி பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அதனடிப்படையில், இந்த நிகழ்ச்சிக்கும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.