முக்கியச் செய்திகள் தமிழகம்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மின் நுகர்வோர்கள் குறித்த முறையான தகவல்களை பெறும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் இந்த காலக்கெடுவிற்கும் ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

நேற்றைய நிலவரப்பட்டி 2 கோடியே 42 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும், 9% மக்கள் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்- தேசிய தேர்வு முகமை

G SaravanaKumar

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக

Arivazhagan Chinnasamy

அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகை கிழிப்பு: இருவர் திமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

Halley Karthik