வளர்ப்பு பிராணி ஆர்வலரா நீங்கள்! இதோ உங்களுக்காகவே ஒரு சர்வதேச கண்காட்சி!!!

உங்கள் கால்களை தனது வாலால் வருடி கொடுத்து உங்களோடு உரையாட முயற்சிக்கும் பூனைகளை ரசித்திருக்கிறீர்களா நீங்கள்? உங்களை பார்த்தவுடன் பாய்ந்து வந்து வாஞ்சையுடன் முன்னங்கால்களை தூக்கி நிற்கும் நாய்களை கட்டி அணைத்திருக்கிறீர்களா நீங்கள்? இதோ…

உங்கள் கால்களை தனது வாலால் வருடி கொடுத்து உங்களோடு உரையாட முயற்சிக்கும் பூனைகளை ரசித்திருக்கிறீர்களா நீங்கள்?

உங்களை பார்த்தவுடன் பாய்ந்து வந்து வாஞ்சையுடன் முன்னங்கால்களை தூக்கி நிற்கும் நாய்களை கட்டி அணைத்திருக்கிறீர்களா நீங்கள்?

இதோ உங்களுக்காகவே ஒரு சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது. எங்கு நடக்கிறது… என்னவெல்லாம் உங்கள் கண்களுக்கு விருந்துபடைக்க இருக்கிறது… விரிவாக பார்க்கலாம்…

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் தான் இந்த சர்வதேச செல்ல பிராணிகளுக்கான இரண்டு நாள் கண்காட்சி துவங்கி நடைப்பெற்று வருகிறது. இன்றும் நாளையும் மட்டுமே நடைபெறும் இக்கண்காட்சியில், வளர்ப்பு பூனை மற்றும் நாய்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தபட்டு அதற்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

இந்த கண்காட்சியில் 50 “க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களும் 150″க்கும் மேற்பட்ட பூனைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த கண்காட்சியில் உலகிலேயே மிகவும் குள்ளமான பீனிக்ஸ் நாய் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதில் ரோமம் எதுவும் இருக்காது, இந்த வகை நாய்கள் ரஷ்யா மற்றும் எகிப்து பகுதியில் மட்டும் காணப்படும். இந்த அரிய வகை நாய் உள்பட பல வகை நாய்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கண்காட்சி குறித்து தகவலறிந்து குடும்பத்துடன் வந்ததாக கூறிய செந்தில் என்ற பார்வையாளர், எதிர்பாக்காத அளவுக்கு அழகிய பல வண்ண வளர்ப்பு பிராணிகளை ஒரே இடத்தில் பார்க்க முடிந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

பூனைகளை பொறுத்தவரை பிரிசியன் வகை பூனை, பிரிட்டிஷ் ஷார்ட் ஹேர் பூனை, ஓரியண்டல் ஷார்ட் ஹேர் ரஷ்யா வகை பூனை என அழகழகான பூனை வகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியை தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்ட கிருஸ்டி என்ற பெண், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு பூனை மிகச்சிறந்த துணையாக இருக்கும் என்று கூறியதோடு, உலகின் அரிய வகை பூனைகளை ஒரே இடத்தில் பார்க்க இந்த கண்காட்சி பேருதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாய், பூனைகளை போன்று அமெரிக்க ப்ளோரிடா பகுதியில் இருக்கும் இக்குவானா கிளி, அரியவகை ஓணான்கள், குதிரைகள் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இதுவரை வளர்ப்பு பிராணிகளை வளர்க்காதோறாக இருந்து, வெறுமனே குழந்தைகளை பொழுது போக்கிற்காக அழைத்துச் சென்றோர் கூட விரும்பி ரசிக்கும் வகையில் இந்த கண்காட்சி உள்ளதாகவே பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆக இன்னும் ஒரு நாள் மட்டுமே கண்காட்சி உள்ள நிலையில், கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறும் சர்வதேச செல்ல பிராணிகளுக்கான இந்த கண்காட்சியை பார்க்க நாளை பெருங்கூட்டம் திறழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.