டிடிஎப் வாசன் விபத்து குறித்து டிடிஎப் வாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்று, அதை தனது செல்போனில் லைவ் வீடியோவாக எடுப்பது வாடிக்கை. போக்குவரத்து விதிகளில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து அபராத தொகையை பலமடங்காக அதிகரித்து பல ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் டிடிஎப் வாசன் மட்டும் ஏனோ இந்த போக்குவரத்து விதிகளுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை கருதிக்கொண்டு அதிவேக பயணம் மேற்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.
இவர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது பிற இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை கண்டித்து வருகின்றனர். கடந்த வாரம் கூட அதிவேகமாக பைக் ஓட்டியதற்காக உதகையில் டிடிஎஃப் வாசனுக்கு ஆயிரம் ரூபாய் அபராத விதித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் தான் TTF வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியானது. அந்த வகையில், TTF வாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை THE BUDGET FILM COMPANY நிறுவனம் தயாரிக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் சென்னை அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்த பயணி மீது தன்னுடைய காரை மோதி விபத்தை ஏற்படுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனிக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார் டிடிஎப் வாசன்.
#TTF vasan car accident pic.twitter.com/K7HviTBY9V
— SUBRAMANIAN.R (@subukarthik18) July 4, 2023
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து காவலர்கள், டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்தில் எடுக்கபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் விபத்து குறித்து டிடிஎப் வாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.