முக்கியச் செய்திகள் தமிழகம்

இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர்

இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமதுஅல்டாப்(25) சென்னை முத்தாப்புதுப்பேட்டை பகுதியில் தங்கி போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில்  வேலை பார்த்து வருகின்றார்.. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முத்தையாள்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வயதான தந்தை சிராஜீதீன் இடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பெண் போல பழகி பேசி வந்ததாகவும்,  பின்னர் தந்தையிடம் தங்களது குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை வாங்கியதாகவும், பின்னர் அந்த அடையாளம் தெரியாத நபர்  தனது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்களை ஆபாசாமாக சித்தரித்து தனது தந்தையின் செல்போனுக்கு அனுப்பியதுடன் 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டு் மிரட்டியதாகவும், அப்படி பணத்தை கொடுக்கவில்லை என்றால் அனைத்து ஆபாச புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டல் விடுப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புகாரின் பேரில் முத்தையாள்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர் மேலும், அல்டாப் மூலம் பணம் கேட்டு மிரட்டிய நபருக்கு போன் செய்து பணத்தை தருவதாக கூறி வரவழைத்தனர். பணத்தை வாங்க வந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அவர் ஏழுகிணறு மூசா தெருவை சேர்ந்த அப்துல்லா(32) என்பதும் , தி நகரில் உள்ள மேன்பவர் சப்ளை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி நண்பர்களை வெறுப்பேற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் போலி முகவரிகளை பயன்படுத்தி பணம் பறிக்கும் பதிவுகளை  முகநூலில் தனது நண்பர்கள் ஷேர் செய்ததை பார்த்ததும் அதே போல பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். மாதம்  30 ஆயிரம் வரை சம்பாதித்த போதும், ஆடம்பரமாக வாழந்திட , வயதான ஆண்களின் முகநூல் கணக்குகளுக்கு   riya basa என்ற பெயரில் முகநூல் கணக்கு துவக்கி வலை விரித்துள்ளார்.

பலருக்கு நட்பு அழைப்பு கொடுத்ததில் பலர் அதனை நட்பாக்கி கொண்டுள்ளனர். அதில் ஒருவராக தான் திருச்சியை சேர்ந்த அல்டாப்பின் தந்தை சிராஜீதீன் இருந்துள்ளார். ஆரம்பத்தில் பேஸ்புக் மெசஜர் மூலமாக பேசியவர்கள், பின்னர் தொலைப்பேசி எண்ணை பறிமாரி கொண்டு டெலிகிராம் செயலி மூலம் சாட்டிங் செய்ய துவங்கி உள்ளனர்.

தான் ஒரு பெண் எனக்கூறி ஒருபெண்ணின் வித விதமான படங்களையும், ஆபாசப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். அவரின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய சிராஜீதீன் தன்னை பற்றிய முழு விவரங்களை தெரிவித்ததோடு, தனது குடும்ப விவரங்களையும் , புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.மேலும் தன்னுடைய வங்கி கணக்கில் 7 இலட்ச ரூபாய் இருப்பதையும் தெரிவித்துள்ளார்.பணம் 7 இலட்சம் இருப்பதை தெரிந்துகொண்டு சிராஜீதீன் குடும்ப உறுப்பினர்களின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அப்துல்லா தான் பெண் அல்ல என்றும்,  இவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்பாமல் இருக்க ரூ. 7 இலட்சம் பணம் தரவேண்டும் என மிரட்டி வந்ததுள்ளார்.

இந்நிலையில் தந்தை சிராஜீதீன் வெட்கத்தை விட்டு தனது மகனிடம் நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மகனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனை பொருட்படுத்த அவர் தொடர்ந்து பணம்கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து போலீசார் தெரிவித்ததின் பேரில் 2 இலட்சம் பணம் தருவதாகக்கூறி அப்துல்லாவை வரவழைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்  அவரிடம் இருந்து 1 செல்போன், 2 ஹாட்டு டிஸ்க்குளை பறிமுதல் செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசி சிக்கலில் சிக்கி கொள்ளவேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டுக்கு 1 கோடி தடுப்பூசி: மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

Halley Karthik

அனைத்து கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் – நீதிமன்றம் பரிந்துரை

Dinesh A

விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

Jeba Arul Robinson