முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் Agriculture Health

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பின்னோக்கி சுழலும் உலகம்

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுபவர் டாக்டர் காதர் வாலி. இயற்கை விவசாய விஞ்ஞானியான இவரை இந்தியாவின் தினை மனிதன் என்றும் குறிப்பிடலாம், காரணம் ஏறக்குறைய 20 வருடங்களாக ‘பாசிட்டிவ் மில்லட்ஸ்’ என்று அழைக்கப்படும் சிரிதன்யா உணவுகளை புத்துயிர் பெற வைப்பதற்காக அயராது இவர் உழைத்து வருவதால் தான்.

ஓரிகானில் தனது முதுகலை ஆராய்ச்சியை முடித்த பிறகு, மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் உணவு விஞ்ஞானியாக பணியாற்றிய இவர், பின்னர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் இயங்கி வரும் DuPont இன் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இருப்பினும் தனது சொந்த நாட்டில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவது தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று உணர்ந்த டாக்டர் காதர் வாலி, 1997ல் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி மைசூரில் குடியேறினார். பின்னர் அவர் எண்ணிய கனவை நினைவாக்க வேகமாக மறைந்து கொண்டிருந்த ஐந்து வகையான தினைகளை உயிர்ப்பிக்க கடுமையாக உழைத்தார். இந்த தினைகள் ஒவ்வொன்றையும் உட்கொள்ளும் போது, அவற்றில் உள்ள பண்புகள் கொடிய நோய்களைக் கூட குணப்படுத்தும் என்பதைக் கண்டுபிடித்தார். எனவே, இந்த ஐந்து தினைகளுக்கு சிரிதன்யா என்று பெயரிட்டார். இவ்வாறு அவர் கண்டுபிடித்த ஐந்து தினைகளின் கலவையானது பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. ஆனால் இன்று எத்தனை இந்தியர்களுக்கு இந்த தானியத்தின் நன்மைகள் பற்றி தெரியும்?

குயினோவா மற்றும் சியா விதைகள் போன்ற வெளிநாட்டு சூப்பர்ஃபுட்கள் இப்போதும் இந்தியாவில் அதிக ஊட்டச்சத்து தேவை காரணமாக பயிரிடப்படுகின்றன, அவைகள் சந்தையிலும் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. இருப்பினும் ராகி தோசைகள் மற்றும் பஜ்ரா ரொட்டிகள் இன்னும் பெரும்பாலான நடுத்தர வர்க்க இந்திய வீடுகளில் விதிக்கு மாறாக பிராந்திய விதிவிலக்காக சமைத்து உட்கொள்ள படுகின்றன என்பதும் சுவாரஸ்யம். நமது தினை பொருட்களுக்கு மாற்றாக பல பொருட்கள் இங்கு சந்தை படுத்தப்பட்டாலும், இந்தியவின் தாவரவகைகள் சியா மற்றும் குயினோவா பயிர்களை எப்போதும் குறிவைப்பதில்லை. அறியாமையை கடுமையாக மறுப்பவர்கள், தான் தான் புத்திசாலி என்று நினைப்பவர்கள் கடைசியாக எப்போது தினையை உணவில் சேர்த்தார்கள் (குறிப்பாக அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக) என்பதை நினைத்து பாருங்கள், இனி ஒவ்வொருவரும் ஏன் சேர்க்கக்கூடாது என்றும் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவில் பசுமை புரட்சி என்ற அடிப்படையில் 1960 களில் இருந்து வளர்ந்து வரும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிக்க, அதிக விளைச்சல் தரும் கோதுமை மற்றும் அரிசியை வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் உந்துதல் புரிந்துகொள்ளக்கூடியது ஆனால் மன்னிக்க முடியாதது. காரணம் அந்த பாராட்டத்தக்க இலக்கை அடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரிய உணவுப் பயிர்கள் தினை உட்பட பல பொருட்கள் ஓரங்கட்டப்பட்டதனால்தான். ஆனால் இன்று அத்தகைய திணைகள் சர்வதேச மதிப்பில் உயிர்த்தெழுப்பப்பட்டு சூப்பர்ஃபுட் என்ற பட்டத்தை பெற்றுள்ளது என்பது சுவரசயமான நகைச்சுவை உண்மை. maize (மகாய்) sorghum (ஜோவர்), oats (ஜெயி), barley (ஜோவ்), pearl millet (பஜ்ரா), finger millet (ராகி), kodo millet (வரகு), proso millet (சீனா), foxtail millet (கவுன்), little millet (குட்கி) மற்றும் barnyard millet (ஷ்யாமா) போன்றவைகளை கரடுமுரடான தானியங்களாக கூறி, இவைகள் கால்நடை தீவனத்திற்கு தான் ஏற்றதாக கூறிய இதே மேற்குலகம், இன்று திடீரென ஊட்டச்சத்து நெருக்கடியால் விழித்தெழுந்து அதன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. மேலும் கோதுமை மற்றும் அரிசியில் மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இந்த வகை தானியங்களுக்குத் திரும்புவதற்கான தர்க்கம் வெளிப்படுகிறது.

இந்த நிலை வர காரணம் உலகெங்கிலும் உள்ள நாடுகள் – இந்தியா உட்பட – கடுமையான நீர் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால்தான். மேலும் பயிர்களில், நெல் மற்றும் கோதுமைக்கு அதிக நீரேற்றம் தேவைப்படுகிறது. இதனால் இன்று “கரடுமுரடான தானியங்கள்” தேவையின் காரணமாக சூப்பர்ஃபுட்களாக மாறிவிட்டன. மேலும் புதிய மேற்கத்திய வழிகாட்டுதலாக முன்பு தானியத்தில் இருந்து கோதுமைக்கும், அரிசிக்கும் அழைத்து சென்ற பாணியை போலவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களுக்கும் தீர்வாக சூப்பர்ஃபுட்களை பரிந்துரைக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கும் இந்தியாவின் முன்மொழிவை ஐ.நா.ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது.

இத்தகைய நிலைப்பாடு வர காரணம் இந்த பயிர்களுக்கு மற்ற தானியங்களை விட குறைவான நீர் மற்றும் விவசாய உள்ளீடுகள் தேவைப்படுவதால், மானாவாரிப் பகுதிகளில் முதன்மையாக பயிரிட முடியும். மேலும் தினைகளில் மனித உடலுக்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. தினை உணவு நார்ச்சத்து நிறைந்தது மற்றும் இது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது போன்றவைகளே அவர்கள் கூறும் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல். ஆனால் இந்த விழிப்புணர்வு இப்போதுதான் இந்தியாவிற்குள் வந்ததா என்பதுதான் கேள்விக்குறி ?

காரணம் 1950-51 முதல் 2019-20 வரை இந்தியாவின் மொத்த பயிர் பரப்பளவில் கரடுமுரடான தானியங்கள் (தினை உட்பட) 30 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 70 வது ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இந்த விழிப்புணர்வு இருந்திருந்தாலும், பசுமைப் புரட்சியின் கோதுமை மற்றும் அரிசியின் தேவை மற்றும் இன்னும் சில காரணிகள் இந்த நினைவுகளை மறக்கடிக்க செய்துவிட்டன. இருப்பினும் இந்தியாவில் உற்பத்தி சதவிகிதங்கள் குறைந்தாலும், இன்னமும் பெரிய தினை உற்பத்தியாளராக தான் உலக அளவில் இந்தியா உள்ளது. அதாவது உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் மேல், சீனாவை விட ஆறு மடங்கு அதிகமாக இந்தியா உற்பத்தி செய்கிறதாம்.

இருப்பினும், உற்பத்தியில் முதன்மையானவர்களாக இருந்தாலும் பல ஆண்டுகளாக அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியின் ஆதிக்கம், வெளிநாட்டு உணவு வகைகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆர்வமும், பெரும்பாலான இந்தியர்களுக்கு தினை பற்றிய அறிவில் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலத்திற்கு நல்லது, உடற்பயிற்சி செய்பவர்கள் இத்தகைய தினைகளை உட்கொள்ள போன்ற காரணங்களால் சில தினைகள் நடைமுறைக்கு வந்து விட்டாலும், பெரும்பாலான தினைகள் இன்னும் ஒப்பீட்டு தெளிவின்மையில் வாடுகின்றன. இதனை மாற்றியமைக்கத்தான் இந்திய சுகாதார வல்லுநர்கள், தினைகள் நார்ச்சத்து மற்றும் புரதத்தின் விதிவிலக்கான நல்ல ஆதாரங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர், மேலும் ஆக்ஸிஜனேற்றிகள், இரும்பு, கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் பி, போன்ற பல சத்துக்கள் இதில் நிரம்பி உள்ளன என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மேலும் அதனால்தான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட் உரையில் கூட, அதிகரித்த உற்பத்தியை ஊக்குவித்ததோடு, மதிப்பு கூட்டப்பட்ட தினைப் பொருட்களை ஊக்குவிக்கவும், குறிப்பாக இந்தியா ஏற்கனவே 2018 ஆம் ஆண்டை தேசிய தினை ஆண்டாகக் கடைப்பிடித்துள்ளதால் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார். அதே போல் இந்த ஆண்டு 2023-24 பட்ஜெட்டிலும் இந்த முக்கியமான முயற்சியை அவர் விரிவுபடுத்துவார் என்று பலர் நம்புகிறர்கள்.

சொல்லப்போனால் இந்தியாவின் முதல் மக்கள் ஆதிவாசிகள், பாரம்பரியமாக பல வகையான தினைகளை வளர்த்து சாப்பிட்டனர், ஆனால் கோதுமை, அரிசி மற்றும் பணப்பயிர்களின் மோகத்தால் அலைக்கழிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, பல பழங்குடி சமூகங்கள் இப்போது தங்கள் பயிர் சுழற்சிகள் மற்றும் உணவுக் கூறுகளின் ஒரு பகுதியாக தினைகளுக்குத் திரும்புகின்றனர். வறண்ட காலநிலையில் செழித்து வளரும் தினைகளை வளர்ப்பது நிச்சயமாக சிறந்த அர்த்தத்தை அளிக்கிறது. நமது புத்திசாலித்தனமான பண்டைய மூதாதையர்கள், முதலில் ஆப்பிரிக்காவிலும், பின்னர் ஆசியாவிலும், காட்டுப் புற்களை வளர்த்து, பயிரிட்டு, இந்தக் கருத்தில் கொண்ட சூப்பர்ஃபுட் அப்போதே விளைவித்தனர் என்பதை இது விளக்குகிறது. பசையம் ஒவ்வாமை மற்றும் நீரிழிவு நோய்களின் அதிகரித்து வரும் நிகழ்வுகள் ஒருவேளை நம் உடல்களின் உயிர் மற்றும் நோய் எதிர்ப்புதன்மை ஆகிய இரண்டிற்கும் தினைகளை மீண்டும் பார்க்க வேண்டிய நேரம் இது என்று நமக்குச் சொல்லும் வழியாக இந்நிகழ்வு தோன்றுகிறது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“தமிழர் பிரதமர் ஆக வேண்டும்”- இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்த சிங்களரின் குரல்

Web Editor

88 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் குறைந்த கொரோனா எண்ணிக்கை!

Vandhana

மக்களுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி; குடியரசுத் தலைவர் புகழாரம்

EZHILARASAN D