நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது – நியூஸ்7 தமிழுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!

நெல்லின் ஈரப்பத அளவு 20%ஆக உயர்த்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத…

நெல்லின் ஈரப்பத அளவு 20%ஆக உயர்த்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே 19 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில், ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, தஞ்சை மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதி கோவிந்தராஜ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-  பருவம் தவறிய மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே சமயம் டெல்டா மாவட்டம் முழுவதும் நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வின் மூலம் விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதும் இந்த நெல்லின் ஈரப்பதத்தினை 20 சதவீதமாக உயர்த்தி இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.