நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஆனந்தமாய் விளையாடிய காட்டு யானையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.சில நாட்களாக அப்பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்கு இதமான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று ஒய்யாரமாக சில நிமிடம் ஓய்வு எடுத்தது. அதன்பின் மழையால், ஈரப்பதமாக மாறிய மண்ணில், ஒற்றை யானை ஆனந்தமாய் விளையாடியது.
இருப்பினும் சுற்றுலா பயணிகளை பொருட்படுத்தாத அந்தப் யானை அப்பகுதியில் அமர்ந்தவாறு வீடியோவுக்கு போஸ் கொடுத்தது. இந்தநிகழ்வை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.







