பணி நிரந்தரம் கோரி, ‘டிபிஐ’ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில்  டிபிஐ வளாகத்தில் கவனம் ஈர்க்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி…

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள்
சார்பில்  டிபிஐ வளாகத்தில் கவனம் ஈர்க்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பன்னிரண்டாயிரத்துக்கும்
மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த
சட்டமன்றத் தேர்தலின் போது பகுதிநேர ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் நூறு
நாட்களில் பணி நிரந்தரம் செய்யும் என 181வது தேர்தல் வாக்குறுதியாக
அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடியும் தறுவாயில் பல்வேறு கட்ட போராட்டங்களை பரிந்துரைத்ததற்காக முன்னெடுத்துள்ள பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சட்டமன்றத்தில் பணி நிரந்தரம் தொடர்பாக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்த பகுதி நேர ஆசிரியர்கள். பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் முதலமைச்சர் ஒளியேற்றிட வேண்டும் என தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.