கேரளா, பாலக்காட்டில் பலாப்பழம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானையின் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா பாலக்காடு அருகே முண்டூர் பகுதியில், குடியிருப்பு பகுதிக்குள் அதிகாலை காட்டு யானை புகுந்தது. குடியிருப்பு பகுதிக்குள் இருந்த வீட்டில்
இருந்த பலாப்பழத்தை யானை தின்று விட்டு சென்றது. ரெஜி என்பவரது இல்லத்தில்
அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடந்ததுள்ளது. மேலும், வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில், சேமித்து வைத்திருந்த பலாப்பழத்தையும்
தின்று விட்டு சென்றது.
வீட்டின் பின்புறத்திலிருந்து சத்தம் கேட்டு வீட்டின் பின்புறம் சென்றவர்கள் யானை பலாப்பழத்தை உண்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றினர்; இந்த காட்சிகள் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், சமீபகாலமாக காட்டு யானைகள் ரெஜியின் வீட்டின் அருகே மரத்தில்
உள்ள பலாப்பழத்தை சாப்பிடுவதற்காக வருகின்றன. காட்டு யானை
குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கு. பாலமுருகன்







