TTF வாசன் நடிப்பில் உருவாகும் “மஞ்சள் வீரன்” – 299 KM வேகத்தில் படபிடிப்பு…

மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டுள்ள TTF வாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளாது.     “ கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் 140 முதல்…

மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டுள்ள TTF வாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளாது.     “

கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்று, அதை தனது செல்போனில் லைவ் வீடியோவாக எடுப்பது வாடிக்கை. போக்குவரத்து விதிகளில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து அபராத தொகையை பலமடங்காக அதிகரித்து பல ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.

ஆனால் டிடிஎப் வாசன் மட்டும் ஏனோ இந்த போக்குவரத்து விதிகளுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை கருதிக்கொண்டு அதிவேக பயணம் மேற்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.

இவர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது பிற இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை கண்டித்து வருகின்றனர்.  கடந்த வாரம் கூட அதிவேகமாக பைக் ஓட்டியதற்காக  உதகையில் டிடிஎஃப் வாசனுக்கு ஆயிரம் ரூபாய் அபராத விதித்து புதுமந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

https://twitter.com/itisprashanth/status/1674235249042112513?s=20

இந்நிலையில் தான் TTF வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியானது. அந்த வகையில், TTF வாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டுள்ளது. இத திரைப்படத்தை THE BUDGET FILM COMPANY நிறுவனம் தயாரிக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.