‘கடைசியா என் கணவர் முகத்தை பார்க்கனும்’ – குவைத்தில் உள்ள மனைவி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்

கும்பகோணத்தில் மாரடைப்பால் ராமச்சந்திரன் என்பவர் உயிரிழந்த நிலையில், குவைத்தில் உள்ள அவரது மனைவி, தன்னை இந்தியா கூட்டி வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கும்பகோணம் அருகே…

கும்பகோணத்தில் மாரடைப்பால் ராமச்சந்திரன் என்பவர் உயிரிழந்த நிலையில், குவைத்தில் உள்ள அவரது மனைவி, தன்னை இந்தியா கூட்டி வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கும்பகோணம் அருகே திப்புராஜபுரம் கிராமத்தில் விவசாய வேலை செய்து வந்த
ரவிச்சந்திரன்(50), இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மனைவி ராமலட்சுமி(45) ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். ரவிச்சந்திரனின் இறப்பு குறித்து தகவல் ராமலட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராமலட்சுமி பணிபுரியும் வீட்டின் உரிமையாளர், அவரை சொந்த ஊருக்கு அனுப்ப எந்த ஏற்பாடும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரவிச்சந்திரனின் உறவினர்கள் இன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பை சந்தித்து, ராமலட்சுமியை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராமலட்சுமி சொந்த ஊர் திரும்பினால்தான் ரவிச்சந்திரனின் உடல் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ராமலட்சுமியை உடனடியாக சொந்த ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குவைத் நாட்டிலுள்ள ராமலட்சுமி, தனது கணவரின் முகத்தை இறுதியாக பார்ப்பதற்கு, தன்னை சொந்த ஊர் கூட்டி வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வாட்ஸ்அப் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.