இன்று வெளியாகிறது ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் – படக்குழு அறிவிப்பு..!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படமான ‘ஜப்பான்’ ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.…

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படமான ‘ஜப்பான்’ ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குநர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

‘ஜப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இவ்விழாவில் சூர்யா மற்றும் சிவக்குமார் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ‘ஜப்பான்’ படத்தின் டீசர் கடந்த 18-ம் தேதி வெளியானது.

இதையும் படியுங்கள் : திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

இந்நிலையில் ஆயுத பூஜை திருநாளான இன்று, ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  ‘டச்சிங் டச்சிங்’ என்ற படத்தின் முதல் பாடல், இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.