தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் – எடப்பாடி பழனிசாமி பதிவு……..!

அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்” என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிந்த தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக ஒவ்வோரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “சங்கத்தில் வளர்ந்து, சரித்திரங்கள் பல படைத்து, சீரிளமை கொண்டு விளங்கும், நம் உயிருக்கு நேராம், செந்தமிழர் தாயாம், அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.