நடிகர் விஜய் தவெக என்னும் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டிட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையமானது தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக சில நாட்களுக்கு முன் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் விராசணை நடத்தப்பட்டது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் சின்னம் ஒதுக்கப்பட்டபின் நடைபெறும் முதல் தவெக கூட்டம் இதுவாகும். இதனால் இன்று நடைபெற்று வரும், தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.







