இந்தியாவின் 76 அவது குடியரசு தினம் நாளை கொண்டாடவுள்ளது. ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் காவல்துறை அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி குடியரசு தலைவர் பதக்கம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கான குடியரசு தலைவர் பதக்கங்களை அறிவித்துள்ளது.
அதன் படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 101 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஜி மகேஸ்வரி , காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமரவேலு மற்றும் துணை ஆணையர் அன்வர் பாஷா உள்ளிட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.







