ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ரெடியாகும் ட்ரீட்.. ரீ-ரிலீசுக்கு தயாராகும் “முத்து” படம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான ‘முத்து’ திரைப்படம் அவரது பிறந்தநாள் அன்று திரையில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான ‘முத்து’ திரைப்படம் அவரது பிறந்தநாள் அன்று திரையில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பானில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலில் பெரிய வெற்றியை பெற்றது.

மீனா நாயகியாக நடித்த இந்த படத்தில், சரத்பாபு, ராதாரவி, சுபாஸ்ரீ, பொன்னம்பலம், வடிவேலு, செந்தில், ரகுவரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படம் தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இப்படம் ஜப்பானில் ரிலீசாகி அங்கு வசூலையும் வாரி குவித்தது. அந்த சமயத்திலேயே ரூ.23.5 கோடி வசூலித்து இருந்தது இப்படம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்த இந்த படம் தமிழகம் மட்டுமல்லாது ஜப்பானிலும் வசூல் சாதனை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல், உலக அளவில் ரஜினி தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்க்க முத்து ஒரு தொடக்கமாக இருந்தது என்று கூறலாம்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ’முத்து’ திரைப்படத்தை தொழில்நுட்ப மெறுகேற்றம் செய்யப்பட்டு மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ரஜினியின் தனிக்காட்டு ராஜா, பாபா ஆகிய படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.