சாலையின் நடுவிலிருந்த தண்ணீரை புலி குடிக்கும் வீடியோவை IFS அதிகாரி பகிர்ந்துள்ளார்.
சமீபகாலமாக, மனித-வனவிலங்குகளின் எதிர்பாராத சந்த்துபள் கொண்ட நிகழ்வுகள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. விலங்குகள் மருத்துவமனைகளுக்குள் அலைவது முதல் வீட்டிற்குள் நுழைவது என பல உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்தகைய நிகழ்வுகள் பெரும்பாலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தான சூழ்நிலையாக மாறும். எனவே, வன விலங்குகளுக்கு அருகில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தற்போது, அதையே காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
The road stopper !! From Katarniaghat WLS. @aakashbadhawan pic.twitter.com/etxOeJLF5B
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 1, 2023
நடுரோட்டில் புலி தண்ணீர் குடிப்பதைக் கண்ட மக்கள் போக்குவரத்தை நிறுத்துவதை வைரலான கிளிப் காட்டுகிறது. இந்தக் கிளிப் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதிலிருந்து, இது 64,000 முறை பார்க்கப்பட்டது. இந்த பகிர்வுக்கு 1200க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பலரின் பலதரப்பட்ட கருத்துகளையும் பெற்று வருகிறது.