பொழிச்சலுார் கோயிலில் தீ மிதி திருவிழா- விஜய் ரசிகர்கள் அன்னதானம்!

சென்னை பொழிச்சலுாரில் உள்ள ஸ்ரீ பிடாரி ஸ்ரீ தேவி கங்கா பவானி சக்தி பீடம் ஆலயத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலுாரில் உள்ள…

சென்னை பொழிச்சலுாரில் உள்ள ஸ்ரீ பிடாரி ஸ்ரீ தேவி கங்கா பவானி சக்தி பீடம் ஆலயத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலுாரில் உள்ள பிடாரி ஸ்ரீ தேவி கங்கா பவானி சக்தி பீடம் ஆலையத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வழிப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பல்லாவரம் தொகுதி தலைவர் சுறா D. ரவி ஏற்பாட்டிலும், மேலும் சுமார் ஆயிரம் பேருக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் V. குமார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்துக்கொண்டு அன்னதானம் வழங்கியது பக்தர்களுக்கு நெகழிச்சியை ஏற்படுத்தியது.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.