ஆசிரியர் ஒருவர் தனது 50-வது பிறந்தநாளில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் கொடுத்து மகிழ்வித்துள்ள சம்பவம் நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
பள்ளியில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கிடையேயான பந்தம் என்பது அண்மை காலமாக கொஞ்சம் இடைவெளி நிறைந்ததாகவே இருந்து வருகிறது. இருப்பினும், வகுப்பறையில் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த மாதிரியான, அவர்களை மிகவும் நேசிக்கும் , நல்வழி படுத்தும் ஆசிரியர்ஒருவர் கட்டாயம் இருப்பார்.
அப்படியான ஒரு ஆசிரியரின் செயல்பாடுகள் நம்மை மிகவும் நெகிழ வைக்கின்றன. அந்த ஆசிரியர் தந்து 50-வது பிறந்த நாளை இ ன்று கொண்டாடுகிறார்.அவரது 50வது பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என்று அவரது மனைவி அவரிடம் கேட்டபோது, அந்த ஆசிரியர் என்னிடம் இருக்கும் பட்ஜெட்டை வைத்து தான் மிகவும் நேசிக்கும் தனது பள்ளி குழந்தைகளுடன் எனது பிறந்த நாளை கொண்டாட விரும்புகிறேன். அவர்களுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அவரது மனைவியும் மிகவும் சந்தோசமடைந்துள்ளார் .
அதற்காக பள்ளிக்கு சென்ற அவர், அங்கு ஒரு தற்காலிக தானியங்கி மேடையில் நின்று, “எனக்கு 50 வயதாகிறது. இன்று மிகவும் சிறப்பான நாள். எனது 50-வது பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என்று என் அழகான மனைவி என்னிடம் கேட்டாள்.” அதற்கு நான் உங்களுடன் கொண்டாட விரும்புகிறேன் என கூறினேன். அதன்படி இன்று உங்கள் அனைவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி தரப்போகிறேன் என்று அறிவித்துளளார். இதைக் கேட்டு அனைத்து மாணவர்களும் ஆரவாரம் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வித்தனர். இதனையடுத்து தனது பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.
இந்த நிகழ்வு வீடியோவாகவும் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை பகிரப்பட்ட இந்த வீடியோவை 17,000- க்கும் அதிகமான பார்வைகள் பார்த்து “நிச்சயமாக அற்புதமான ஐஸ்கிரீம் அனைவருக்கும் பிடிக்கும். சிறந்த ஆசிரியர்,” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
700 ICE CREAMS FOR EVERYONE AT SCHOOL: When his wife asked him what he wanted for his 50th birthday, this teacher said he wanted to do something for the kids.
He bought ice cream instead of having a party/ gifts from his family using his birthday budget! pic.twitter.com/DjAAXUmWCh
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) February 5, 2023
- பி. ஜேம்ஸ் லிசா








