தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென தீ விபத்து!

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில்…

A sudden fire broke out in a grocery store near Tanjore New Bus Station!

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் இன்று (அக். 31) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த அந்த பகுதியில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் லாரி தண்ணீரை கொண்டு தீயை அனைக்க போராடினர், ஆனால் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.