157 ஆண்டுகளாக மூன்று வேலையும் பல லட்சக்கணக்கானோரின் பசியை தீர்த்து வரும் அணையா அடுப்பை வள்ளலார் ஏற்றி வைத்த தினத்தை முன்னிட்டு சத்திய தர்மச்சாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் சாதி, மத, இனங்களைக் கடந்து அனைவரும் சம என உணர்ந்து சக்தியை ஞான சபையை கடந்த 1872 ஆம் ஆண்டு நிறுவினார். இது 1865ஆம் ஆண்டு நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடுவதை கண்டு மனம் வருந்தி வள்ளலார் 1867-ஆம் ஆண்டு வடலுாரில் சத்திய தர்மச்சாலை ஒன்றை நிறுவி மூன்று வேலையும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தார்.
இந்நிலையில் வள்ளலார் அணையா அடுப்பை ஏற்றி வைத்து 157வது ஆண்டு இன்றைய தினம் துவங்குகிறது. இதனை முன்னிட்டு சத்திய ஞான சபை மற்றும் தர்மச்சாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவருட்பா பாடல்கள் பாடப்பெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு திருவருட்பா இசைக்கச்சேரி நடைபெற உள்ளது.
—-அனகா காளமேகன்






