தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அவ்வப்போது தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி இதுவரை, தமிழ்த்தாய் வாழ்த்து, நீட் தேர்வு, ஃப்.சி.ஆர்.ஏ ஆகியவை தொடர்பாக திர்மானங்கள் நிறைவெற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் திர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய உள்ளார். அதன்பின் திர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

முன்னதாக, தற்பொது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையரையில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த 8-ஆம் தேதி முதலமைச்ச்ர விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இந்த் ஆலோசனை கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக் உள்ளிட்ட கட்சிகள் புரக்கணித்தன. இக்கூட்டத்தில் 543 என்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தக்க வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.