“எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்” – பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 14) கூடியது. தொடர்ந்து, 2025 – 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2.33 மணி நேரம் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையாற்றினார். இந்த நிலையில், பட்ஜெட் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்

ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்

இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்

தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்

புதிய நகரம்
புதிய விமான நிலையம்
புதிய நீர்த்தேக்கம்
அதிவேக ரயில் சேவை

என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!

‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது #TNBudget2025!

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.